தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 5:04PM by PIB Chennai
அருணாச்சலப் பிரதேசம் மாநிலம் லோகித் மாவட்டம் மற்றும் சில்லுக்-டின்-அலி முதல் தோஹன்கம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 13-ஐயொட்டிய பகுதிகளில் செல்போன் நெட்வொர்க் சேவையின் தரம் குறித்து 2026 செப்டம்பர் மாதம் சோதனை நடத்தப்பட்டது. குரலின் தரம், செல்போன்களுக்கான சிக்னல், இணைப்பு துண்டிப்பு, வெற்றிகரமான அழைப்புகள், தரவு பதிவிறக்கம் போன்றவை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. நகரங்கள், முக்கிய இடங்கள், பொது போக்குவரத்து மையங்கள் ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 2ஜி, 3ஜி, 4ஜி, 5ஜி நெட்வொர்க்கின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் செல்போன் நெட்வொர்க் சேவையை மேம்படுத்தும் நோக்கத்திலும், வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
2026 செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 10-ம் தேதி வரை இந்த சோதனை நடத்தப்பட்டது.
சேவையில் உள்ள நிறைகுறைகள், சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333149®=3&lang=1
****
SK/IR/PS/SH