பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – கனடா இடையேயான பாதுகாப்பு தொடர்பான உரையாடல் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 10:30PM by PIB Chennai

இந்தியா–கனடா இடையேயான பாதுகாப்பு தொடர்பான உரையாடலின் தொடக்க அமர்வு 2026 நவம்பர் 3 அன்று காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பாதுகாப்புத்துறை இணை செயலாளர் (சர்வதேச ஒத்துழைப்பு) டாக்டர் அமித் தெலாங், கனடா நாட்டின் பாதுகாப்புத்துறையின்  உதவித் துணை அமைச்சர் (கொள்கை) திரு ஸ்காட் மில்லர் ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினார்கள்.

இந்த உரையாடல் இரு நாடுகளின் பாதுகாப்புக் கொள்கைகள், உத்திசார்ந்த கண்ணோட்டங்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராயவும் வாய்ப்பை ஏற்படுத்தியது. இதில் பாதுகாப்புத் தளவாட தொழில்துறை ஒத்துழைப்பு ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. அத்துடன், ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவையும் எதிர்கால கூட்டு நடவடிக்கைக்கான முன்னுரிமைத் துறைகளாக அடையாளம் காணப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332827&reg=3&lang=1&_gl=1

***

AD/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2333223) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese