இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 8:33PM by PIB Chennai
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எனது இளைய பாரதம் அமைப்பு (மை பாரத்), தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தில் இளைஞர்களின் பொறுப்பான பங்கேற்பை ஊக்குவிக்கவும், நாடு தழுவிய அளவில் 'உங்கள் வாக்கை அறிந்து கொள்ளுங்கள்' என்ற விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 24 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 91 இளைஞர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் இன்று (2026 நவம்பர் 3) நடைபெற்றன. இந்நிழ்வுகளில் 15,453 இளைஞர்கள், 90 இளைஞர் தூதர்கள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று வாக்குரிமை, ஜனநாயக மாண்புகள், குடிமக்களின் பொறுப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, புதுச்சேரி, தில்லி, உத்தரப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், பீகார் உள்ளிட்ட பல்வேறு பிராந்தியங்களில் இந்நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன. இதன் மூலம், நாடு முழுவதும் 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இதுவரை மொத்தம் 311 இளைஞர் கலந்துரையாடல் நிகழ்வுகள் நடத்தப்பட்டு, 59,408 இளைஞர்களும், 310 இளைஞர் தூதர்களும் இந்த இயக்கத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332276®=3&lang=1
***
AD/PD/RJ