சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி 2026

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 8:01PM by PIB Chennai

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் புதுதில்லி ஐஎன்ஏ தில்லி ஹாட்டில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி 2026 நடைபெற்று வருகிறது. நாட்டின் பாரம்பரிய கைவினைத் தொழில்கள், கைத்தறித் தயாரிப்புகள் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை ஒரே தளத்தில் வெளிப்படுத்தும் நோக்கில் 15 நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.

கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட அவர், கைவினைக்கலைஞர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தயாரிப்புகள், பாரம்பரிய கலை நுணுக்கங்களைப் பாராட்டினார். விளிம்புநிலை சமுதாயங்களைச் சேர்ந்த கைவினைக்கலைஞர்கள் தங்களின் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த தளம் பெரிதும் உதவியாக உள்ளது.

இக்கண்காட்சியில் 130-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், கைவினைக்கலைஞர்கள் தயாரித்த ஆடை வகைகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், பூஜை பொருட்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மாலை நேரங்களில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. இக்கண்காட்சி 2026 நவம்பர் 15 வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332256&reg=3&lang=1

***

AD/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333110) வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी