தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 4:21PM by PIB Chennai
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) நெட்வொர்க் அனுபவ் என்ற தளத்தைத் தொடங்கியுள்ளது. இது பயனர் சோதனைத் தரவுகள், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தன்னிச்சையான நேரடிச் சோதனைத் தரவு ஆகியவற்றை வழங்குவதற்கான ஒரு புவிசார் பகுப்பாய்வு தகவல் பலகையாகும். பயனர் சோதனைத் தரவுகளில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மைஸ்பீடு, மைகால் செயலிகளிலிருந்துப் பெறப்பட்டச் சோதனை முடிவுகள் இடம்பெறுகிறது. இத்தளம் நுகர்வோர், சேவை வழங்குநர்களுக்கும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் நெட்வொர்க் அளவுகள் குறித்த நுண்ணறிவுகளை அளிக்கிறது.
இதன்மூலம் செல்லுலார் அல்லது ஃபிக்சட் பிராட்பேங்க் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளச் சோதனை முடிவுகளைக் காணலாம். அத்துடன் பதிவிறக்கம், பதிவேற்ற வேகங்கள் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் சேவை வழங்குநர் வாரியாகவும், தொழில்நுட்ப வாரியாகவும் அவற்றைப் பிரிக்கலாம்.
நுகர்வோரால் உருவாக்கப்பட்ட சோதனை முடிவுகளின் இருப்பிடம் மற்றும் பரவல் குறித்து வரைபடத்தில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332534®=3&lang=1
***
AD/IR/SM/RJ