இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 12:07PM by PIB Chennai
வளரும் நாடுகளின் முன்னேற்றத்திற்காக, திறன் மேம்பாடு, ஆராய்ச்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தும் வகையில், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம் - வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மத்திய தகவல் அமைப்பில் உள்ள உலகின் தென்பகுதி நாடுகளுக்கான சிறப்பு மையம் இடையே 3 நவம்பர் 2026 அன்று ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
நீடித்த, குறைந்த செலவில், உள்ளூர் சூழலுக்கு உகந்த வகையில், தீர்வுகளைக் கண்டறிவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம், வளரும் நாடுகளிடையே அறிவுப் பகிர்வு, பரஸ்பர கற்றல் நடவடிக்கைகள் மேம்படுத்துவதை உலகின் தென்பகுதி நாடுகளுக்கான சிறப்பு மையம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளங்களைப் பகிர்தல், தொழில்நுட்பப் பரிமாற்றம், அனுபவப் பரிமாற்றம், கூட்டு உத்திகள் மூலம், பொதுவான சவால்களை எதிர்கொள்ளவும், நீடித்த வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் இந்த அமைப்பு முயற்சி மேற்கொள்கிறது.
இத்தகைய சூழலில், அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகம், விரிவான அறிவியல், தொழில்நுட்ப அறிவுத் தளத்தையும், வளரும் நாடுகளின் மேம்பாட்டிற்கானத் தேவைகளுக்கு உகந்த, உடனடிப் பயன்பாட்டுடன் கூடிய, மலிவான, மாற்றியமைக்கக்கூடிய தொழில்நுட்பங்களின் தொகுப்பிற்கும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
இந்தத் தொழில்நுட்பங்கள், நட்பு நாடுகளுக்கும் பரவலாக விரிவுபடுத்துவதற்கும், தொழில்துறை அடிப்படையிலான செயலாக்கத்திற்கும், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் கணிசமான சாத்தியக்கூறுகளை வழங்குகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2332389®=3&lang=1&_gl=1
***
AD/SV/RJ