இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2026 6:05PM by PIB Chennai
தில்லி-என்சிஆர் பகுதிக்கு வெளியே முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சரஸ் மேளாவில் ரூ.12.8 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் பெரும் வெற்றியுடன் நிறைவடைந்த இந்த நிகழ்வில் 12 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை புரிந்தனர்.
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம், ஆந்திரப்பிரதேச மாநில அரசுடன் இணைந்து நடத்திய இந்த தேசிய சரஸ் மேளா, அம்மாநிலத்தின் விஜயவாடாவில் உள்ள புன்னமி காட்டில் நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,500 பெண் தொழில்முனைவோர்களும், லட்சாதிபதி சகோதரிகளும் பங்கேற்றனர். மொத்தம் 600 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த இந்த மேளாவில், நாளொன்றுக்கு சராசரியாக 45,000 முதல் 50,000 பார்வையாளர்கள் வருகை தந்தனர்.
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, அக்டோபர் 15, 2026 அன்று இந்த தேசிய சரஸ் மேளாவைத் தொடங்கி வைத்தார். அவர் அங்குள்ள அரங்குகளைப் பார்வையிட்டதுடன், லட்சாதிபதி சகோதரிகளுடன் கலந்துரையாடினார். பெண்களிடையே தொழில்முனைவு ஆர்வம் அதிகரித்திருப்பதையும், பொருளாதார முடிவெடுக்கும் செயல்பாடுகளில் கிராமப்புறப் பெண்களின் பங்களிப்பு உயர்ந்திருப்பதையும் கண்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332675®=3&lang=1
***
SK/SV/RJ