PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்திய விமானப் போக்குவரத்து தொடர்பான புதிய விதிகளின் அமலாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 6:11PM by PIB Chennai

உலகின் மிக விரைவான வளர்ச்சி கண்டு வரும் சிவில் விமானப் போக்குவரத்து கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இங்கு விமானப் போக்குவரத்து, முக்கிய நகரங்கள், சிறிய நகரங்கள், தொலைதூரப் பகுதிகளை அதிகளவில் இணைக்கிறது. இந்தியாவின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பின் இந்த விரிவாக்கம், 2014-ல் 74 ஆக இருந்தது.

செயல்பாட்டில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை, அக்டோபர் 2026 நிலவரப்படி 166 ஆக உயர்ந்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் ஒழுங்குமுறைக் கட்டமைப்பு, விமானத் தொழில்நுட்பம், செயல்பாடுகள்,  நிதியுதவி ஆகியவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பாதுகாப்பை மையமாகக் கொண்ட நடைமுறைகளைக் கொண்டு முன்னேற வேண்டும்.

இத்தகைய வளர்ச்சிக்குத் தெளிவான, நவீன,  பாதுகாப்பை மையமாகக் கொண்ட ஒரு சட்டக் கட்டமைப்பு தேவைப்படுகிறது. இந்திய விமானப் போக்குவரத்துச் சட்டம், 2024 இந்த நவீனமயமாக்கல் நடவடிக்கைகளுக்கான சட்ட அடிப்படையை வழங்குகிறது.

இச்சட்டத்தின் கீழ், பல தசாப்தங்களாக செயல்பாட்டில் இருந்து வந்த 1937-ம் ஆண்டின் விமான விதிகளுக்கு மாற்றாக  இந்திய விமானப் போக்குவரத்து விதிகள், 2026-ஐ மத்திய அரசு அறிவித்தது. 2027 ஜனவரி 1 அன்று அமலுக்கு வரும் இந்தப் புதிய விதிகள், விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பாதுகாப்புத் தேவைகளைத் தக்கவைத்துக் கொள்கின்றன.

வடிவமைப்புகளை ஏற்றுக்கொள்வது, உதிரிபாகங்கள் தயாரிப்பதற்கான அங்கீகாரம் வழங்குவது உட்பட, விமான வடிவமைப்பு, சான்றிதழுக்கான வரையறுக்கப்பட்ட கட்டமைப்பு இதன் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாகும். இது, 'வடிவமைப்பின் அரசு' என்ற வகையில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துகிறது. இந்த விதிகள் பகுதி உரிமையையும் உள்ளடக்கியுள்ளன. இது ஒரு விமானத்தின் செயல்பாடு, பராமரிப்பைத் தெளிவாக அடையாளம் காணப்பட்ட பொறுப்பின் கீழ் கொண்டு வருகிறது. 

இது விமானக் கொள்முதல், குத்தகைச் செலவுகளைக் குறைக்கவும், விமானக் கட்டணங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் உதவிடும். இந்த விதிகள், விமான நிறுவனங்களின் வணிக நெகிழ்வுத்தன்மை, வணிகம் செய்வதற்கான எளிமை, பயணிகளின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த முயல்கின்றன. விமானக் கட்டணங்கள், அதனுடன் தொடர்புடைய கட்டணங்களில் அதிக வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம், அவை பயணிகளை மையமாகக் கொண்ட பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துகின்றன. அதே நேரத்தில், அசாதாரண சூழ்நிலைகளில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவும் வகை செய்கின்றன.

இந்த விதிகள் எட்டு அத்தியாயங்கள், ஆறு அட்டவணைகளாக ஒழுங்கமைக்கப்பட்ட 220 விதிகளைக் கொண்டுள்ளது. இவை விமானப் பதிவு, பறப்பதற்குத் தகுதி, பணியாளர் உரிமம், விமான நிலையச் செயல்பாடுகள், வான்வழி வழிகாட்டுதல் சேவைகள், விமானச் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.

மேலும், ஒழுங்குமுறை மேற்பார்வை, பாதுகாப்பு மேலாண்மை, அமலாக்கம்,  அபராதங்களுக்கான தேவைகளையும் இவை வகுக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332687&reg=3&lang=1   

***

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332939) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati