சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தை துவக்கி வைத்தார் மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 7:23PM by PIB Chennai

சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், இன்று மாலை தில்லியில், தலைமுறைகளுக்கு இடையிலான பிணைப்பை வலுப்படுத்துவதற்கான தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக குடிமக்களைத் திரட்டுவதற்காக, இந்தப் பிரச்சாரம் குறித்த கையேட்டை வெளியிட்ட அமைச்சர், 'முதியோருக்கான துணை' என்ற தன்னார்வ முன்முயற்சியையும் தொடங்கி வைத்தார்.

நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் மாறிவரும் குடும்பக் கட்டமைப்புகள் ஆகியவை தலைமுறைகளுக்கு இடையிலான வழக்கமான தொடர்பைக் குறைத்துள்ளன என்று குறிப்பிட்ட அமைச்சர், இதன் விளைவாக தனிமை, நலத்திட்டங்கள் குறித்த போதிய விழிப்புணர்வின்மை, இணைய மோசடிகளுக்கு ஆளாகும் அபாயம் போன்ற சவால்களை முதியவர்கள் எதிர்கொள்கின்றனர் என்று தெரிவித்தார். பரஸ்பர கற்றல் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அமைச்சர், “இளைஞர்கள் நம் முதியவர்களை டிஜிட்டல் உலகத்துடன் இணைப்பார்கள்; அதேவேளையில், முதியவர்கள், இளைஞர்களுக்கு வாழ்க்கையின் மாண்புகளை எடுத்துரைப்பார்கள்” என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332740&reg=3&lang=1

***

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332935) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati