பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் மாற்றுச் சிக்கல் தீர்வுச் சூழலை மேம்படுத்தவும், வணிகம் செய்வதை எளிதாக்கவும் ஐஐசிஏ, ஐஏஎம்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2026 7:08PM by PIB Chennai

இந்திய பெருநிறுவன விவகாரக் கழகம் (ஐஐசிஏ), தெலங்கானா அரசு, தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட தன்னாட்சி அமைப்பான, ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச நடுவர் மற்றும் மத்தியஸ்த மையத்துடன் (ஐஏஎம்சி) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. நடுவர் தீர்ப்பு, மத்தியஸ்தம், பெருநிறுவன விவகாரங்கள் மற்றும் இரு தரப்புக்கும் நன்மை பயக்கும் இதர தொடர்புடைய துறைகளில், நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், தொழில்முறைச் சிறப்பை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது.

 

 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், ஐஐசிஏ-வின் தலைமை நிர்வாக அதிகாரி கர்னல் அமன்தீப் சிங் பூரியும், ஐஏஎம்சி-ன் தலைமை நிர்வாக அதிகாரியும்,  பதிவாளருமான ஏ.ஜே. ஜவாத் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332723&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2332810) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Assamese