குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளமைக்கான நேர்மை என்ற கருப்பொருளில், மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் விழிப்புணர்வு வாரம்

இடுகை இடப்பட்ட நாள்: 03 NOV 2026 5:49PM by PIB Chennai

மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம், 2026 அக்டோபர் 26 முதல் நவம்பர் 1 வரை ‘விழிப்புணர்வு வாரத்தை’கடைப்பிடித்தது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “வளமைக்கான நேர்மை” என்பதாகும்.

ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, மத்திய அமைச்சகம் ஆகஸ்ட் 17 முதல் நவம்பர் 16, 2026 வரை மூன்று மாத கால தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டது. இதில் நிலுவையில் உள்ள புகார்கள்,  வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காண்பது, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், டிஜிட்டல் முன்முயற்சிகள், ஒப்பந்த மேலாண்மை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்த ஒரு வார கால நிகழ்வு, 2026 அக்டோபர் 26 அன்று தொடங்கியது. புது தில்லியில் உள்ள ‘கடமை மாளிகை -3’ வளாகத்தில், அமைச்சகத்தின் செயலாளர் திரு பரத் கேரா, அமைச்சக அதிகாரிகள், பணியாளர்களுக்கு ‘நேர்மை உறுதிமொழியை செய்து வைத்தார்.

அமைச்சகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், நேரில், காணொளி வாயிலாக இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றனர். இதன் மூலம், பொதுச் சேவையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை, அறநெறியைக் கடைப்பிடிப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332151&reg=3&lang=1    

****

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2332338) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese