சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 2:25PM by PIB Chennai
பட்டியலினத்தை சேர்ந்த 26 வயது மாணவர் ஆரவ் மானே (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர், வெளிநாட்டில் கல்வி பயில விரும்பினார். இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி படித்தபோது போதிய நிதியின்றி மிகவும் சிரமத்துக்குள்ளானார். கல்விக் கட்டண உயர்வு, தங்கும் இடம், உணவு போன்றவற்றுக்கான செலவு அதிகரித்த நிலையில், அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியில் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். தனது லட்சியமான செயற்கை நுண்ணறிவு பொறியியல் படிப்பை முடிக்க பல்வேறு சவால்களை எதிர்க்கொள்ள வேண்டியிருந்தது. இந்நிலையில், தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ், ஆரவ் மானே விண்ணப்பம் செய்திருந்த நிலையில், அவருக்கு உதவித்தொகை கிடைத்தது. 2024-2026ம் ஆண்டு காலகட்டத்தில், அவருக்கு வழங்கப்பட்ட உதவித்தொகையானது, கல்வி கட்டணம், வாழ்வாதாரத்திற்கான செலவு ஆகியவற்றுக்கு போதுமானதாக இருந்தது. இதனால் அவருடைய குடும்பத்தினருக்கும் நிதிச்சுமை வெகுவாக குறைந்தது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் உள்ள மொனாஷ் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு பொறியலில் முதுகலை படிப்பை வெற்றிகரமாக முடித்தார் ஆரவ் மானே. இவர், இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு துறையில் நவீன தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, அதன்மூலம் இந்தியாவுக்கு பங்களிப்பு செய்யவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். தேசிய வெளிநாட்டு கல்வி உதவித்தொகையானது, ஆரவ் மானே-க்கு சர்வதே அளவில் தரமான கல்வி, உலகளாவிய அனுபவம், செயற்கை நுண்ணறிவில் மேம்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள வாய்ப்பை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332000®=3&lang=1
***
AD/LN/RJ