இடுகை இடப்பட்ட நாள்:
03 NOV 2026 5:11PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனங்கள் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நிலப் பணமாக்குதல் கழகம், புது தில்லியில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
இதில் புதுதில்லியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள, எச்ஐஎல் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான 5.119 ஏக்கர் நிலத்தை, மின்னணு ஏலம் மூலம் விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்த நிலத்தின் அமைவிடம், முக்கிய சிறப்பம்சங்கள், மேம்பாட்டு வாய்ப்புகள், நிலப் பயன்பாட்டு விதிமுறைகள், தகுதிக்கான நிபந்தனைகள், மின்னணு ஏலத்திற்கான விதிமுறைகள் குறித்து, ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் தேசிய நிலப் பணமாக்குதல் கழகம், எச்ஐஎல் இந்தியா நிறுவனம், பரிவர்த்தனை ஆலோசகரான சிபிஆர்இ இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, நிலம், ஏல நடைமுறை குறித்த விரிவான தகவல்களைத் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2332107®=3&lang=1
****
SK/SV/RJ