பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தலைமைத்துவம், சீர்திருத்த நடவடிக்கைகள், மாற்றங்களைப் பிரதிபலிக்கும் கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 SEP 2026 1:25PM by PIB Chennai

பிரதமருடன் பணியாற்றிய அனுபவம், பெரிய அளவிலான கனவுகள் காண்பதற்கான முக்கியத்துவம், மாற்றங்களை முன்னிலைப்படுத்தும் சீர்திருத்த நடவடிக்கைகளின் பங்களிப்பு ஆகியவற்றை குறித்து திரு அமிதாப் காந்த் எழுதியுள்ள கட்டுரை ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கல்வி, சுகாதாரம், விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை இந்தக் கட்டுரை விரிவாக எடுத்துரைப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மக்கள், வர்த்தகர்களுக்கு ஏற்ற, எளிதான, திறமையான நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதில் சீர்திருத்த நடவடிக்கைகள் எத்தகைய பங்களிப்பை வழங்கியுள்ளன என்பது குறித்தும் இந்தக் கட்டுரை விவரிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

திரு அமிதாப் காந்த எழுதியுள்ள இந்தக் கட்டுரையில் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார். பிரதமரின் பணிசார்ந்த நடைமுறைகள் பெரிய அளவிலான கனவுகள் காண்பதன் முக்கியத்துவம், சீர்திருத்த நடவடிக்கைகள் எவ்வாறு மாற்றத்திற்கு வழிவகுக்கின்றன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மாவட்டங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் எவ்வாறு உதவிகரமாக அமைந்தது என்பது குறித்தும் மக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எளிதான, திறமையான நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதில் சீர்திருத்த நடவடிக்கைகளின் பங்களிப்புக் குறித்தும் இக்கட்டுரையில் அவர் விவரித்துள்ளார்.

***

(Release ID: 2311911)

SS/SV/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2331949) வருகையாளர் எண்ணிக்கை : 8