இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 4:37PM by PIB Chennai
விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள பிரகாசமான எக்ஸ்-கதிர்களில் ஒன்றான என்ஜிசி 4490 யுஎல்எக்ஸ்-8-ன் மாறிவரும் எக்ஸ்-கதிர்களின் தன்மை குறித்து, வானியல் ஆய்வாளர்களின் 24 ஆண்டு கால ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
இது, யுஎல்எக்ஸ்களுக்கு ஆற்றல் அளிக்கும் அடர்த்தியான பொருட்களைப் புரிந்துகொள்ளவும், இதுபோன்ற சூழல்களில் அதன் தன்மையைக் கண்காணிக்கவும் இத்தகைய ஆய்வுகள் உதவிடும்.
விண்மீன் மண்டலங்களின் மையங்களில் உள்ள கருந்துளைகளின் உமிழ்வைத் தவிர, மிகப்பிரகாசமான எக்ஸ்-கதிர்கள் அவற்றில் பிரகாசமான உமிழிகளில் ஒன்றாகும். யுஎல்எக்ஸ்-ன் ஒரு துணை நட்சத்திரத்திலிருந்து பொருளை ஈர்க்கும் நியூட்ரான் நட்சத்திரங்கள் அல்லது கருந்துளைகளைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பொருள் உள்நோக்கி விழும்போது, அது வெப்பமடைந்து எக்ஸ்-கதிர்களை வெளியிடுகிறது. ஈர்ப்பு விசை பொருளை உள்நோக்கி இழுப்பதற்கும், கதிர்வீச்சு அதை வெளிநோக்கித் தள்ளுவதற்கும் இடையேயான ஒரு எளிய சமநிலையால் கணிக்கப்பட்ட அதிகபட்ச ஒளிர்திறனை விட, யுஎல்எக்ஸ் கதிர்கள் எதிர்பார்த்ததை விட அதிக பிரகாசமாக ஒளிர்வதாகத் தோன்றுகின்றன.
எடிங்டன் வரம்பு என்று அழைக்கப்படும் இந்த வரம்பு, திரளும் ஒரு பொருள் எவ்வளவு பிரகாசமாக இருக்க முடியும் என்பதற்கான ஒரு அளவுகோலாகப் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331589®=48&lang=1
***
TV/SV/GS