இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 2:59PM by PIB Chennai
நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி, விநியோகம், நிலக்கரிப் படுகையிலிருந்து நிலக்கரியைப் பாதுகாப்பாக எடுக்கும் செயல்முறை ஆகியவற்றில் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் சிறப்பான செயல்திறன் மூலம் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் முக்கிய வளர்ச்சி காரணியாக உருவெடுத்துள்ளது.
2026 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் இந்த 3 முக்கிய செயல்பாடுகளிலும் இலக்குகளை கடந்த ஒரே நிறுவனமாக வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இது உற்பத்தி இலக்கில் 102.47 சதவீதத்தையும், விநியோக இலக்கில் 108.82 சதவீதத்தையும், நிலக்கரியை பாதுகாப்பாக எடுக்கும் செயல்முறைக்கான இலக்கில் 104.5 சதவீதத்தையும் எட்டியுள்ளது.
உள்நாட்டில் நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்வதிலும், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஆதரவளிப்பதிலும் இந்நிறுவனத்தின் வலுவான செயல்பாட்டுத்திறன் முக்கியப் பங்காற்றியுள்ளது.
2026 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் கூடுதலாக 4.5 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் ஒட்டுமொத்த நிகர உற்பத்தி வளர்ச்சியைவிட இது அதிகமாகும்.
வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் 2026 அக்டோபர் மாதத்தில் சிறந்த வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இக்காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 5.93 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 3.60 மில்லியன் டன்னாக இருந்தது. இதன்மூலம் 64.87 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331511®=48&lang=1
***
SS/IR/LDN/GS