இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 12:54PM by PIB Chennai
விமானப்படைப் பள்ளிகளில் இணையப் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, விமானப்படைத் தலைமையகத்தின் கீழ் செயல்படும் இந்திய விமானப்படை கல்வி, கலாச்சார சங்கம், தகவல் பகிர்வு, பகுப்பாய்வு மைய அறக்கட்டளை மூலம், நாடு முழுவதும் உள்ள விமானப்படைப் பள்ளிகளை 'ஸ்க்ரோல் கண்ட்ரோல்' என்ற விரிவான குழந்தைகளுக்கான டிஜிட்டல் பாதுகாப்புத் திட்டத்தில் இணைத்துள்ளது.
நாற்பத்திரண்டு விமானப்படைப் பள்ளிகளைச் சேர்ந்த இருநூற்று அறுபத்தொரு ஆசிரியர்கள், இணையவழிக் குற்றத் தடுப்புப் பணிகளுக்கான அதிகாரிகளாகச் சான்றிதழ் படிப்பை முடித்துள்ளனர். இதன் மூலம், குழந்தைகளை இணையவழியில் தவறான வழிகாட்டுதல், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, விளையாட்டுகள் தொடர்பான தீங்குகள், நிதி மோசடிகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதுடன், டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும், முன்னணிக்கு களப் பணியாளர்களாகச் செயல்படவும் அவர்களுக்கு உதவுகிறது.
குறைந்த விலையில் அதிவேக இணையதள இணைப்பு, ஸ்மார்ட் சாதனங்கள், சமூக ஊடகங்களுக்கான பயன்பாடு உள்ள இந்தக் காலகட்டத்தில், பள்ளி செல்லும் குழந்தைகள், முதன்மையாகப் பெரியவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்படாத டிஜிட்டல் செயலிகளைப் பெருமளவில் பயன்படுத்துபவர்களாக மாறுகின்றனர். இணையதள பயன்பாட்டில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், பள்ளிகளில் மாதந்தோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் இணையதள விழிப்புணர்வு தினம் மூலம், இணையப் பாதுகாப்பு குறித்த சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331454®=3&lang=1
***
SS/SV/GS