மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் மாநிலத்தில் பால்வளத்துறையை மேம்படுத்த ரூ.2.51 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 02 NOV 2026 6:39AM by PIB Chennai

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை அமைச்சர் திரு ராஜிவ் ராஜன் சிங், சிக்கிம் மாநிலம், காங்டாக், மன்கான் ஆகிய மாவட்டங்களுக்கு 2026 நவம்பர் 2, 3-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.  பால்வள மேம்பாட்டு திட்டங்களை ஆய்வு செய்யும் மத்திய அமைச்சர், சிக்கிம் பால் ஒன்றியத்திற்கான நுண்ணுயிரியல் ஆய்வகத்தை திறந்து வைக்கிறார். மேலும், வெண்மை புரட்சி 2.0 திட்டத்தின் கீழ், 57 புதிய பால் கூட்டுறவு சங்கங்களை தொடங்கி வைக்கிறார். புதிதாக பதிவு செய்துள்ள 5 பால் கூட்டுறவு சங்கங்களுக்கான சான்றிதழ்களை வழங்குகிறார். மேலும் பால் பண்ணையாளர்கள் பயன்பெறும் வகையில் வடக்கு சிக்கிமில் 15 புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். காங்டாக், ஜோரேதாங் ஆகிய பாலாடைக்கட்டி உற்பத்திக்கான இடங்களை கண்டறிவது தொடர்பாக ஆலோசிக்கவுள்ளார்.

இந்நிகழ்ச்சிகளில், சிக்கிம் மாநில அரசின் உயர் அதிகாரிகள், மான்கான் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், மத்திய கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை பிரதிநிதிகள், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், பால் பண்ணையாளர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பால் பண்ணை உற்பத்தியாளர் அமைப்பினர் கலந்துகொள்ள உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331374&reg=48&lang=1

 

***

SS/LN/GS 


(வெளியீட்டு அடையாள எண்: 2331587) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese