இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2026 7:01PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்கா, 01.11.2026 அன்று தனது 67-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது. இதையொட்டி, பார்வையாளர்களுக்காக ஒரு சுவாரஸ்யமான 'டூடில்' கலை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது வனவிலங்கு பாதுகாப்பு, பல்லுயிர் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் கல்வி ஆகியவற்றிற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. தேசிய உயிரியல் பூங்காவுடன் இணைந்து செயல்படுமாறும், வளமான பல்லுயிர் பெருக்கம் குறித்து அறிந்துகொள்ளுமாறும், வருங்கால சந்ததியினருக்காக வனவிலங்குகளையும் இயற்கை உலகையும் பாதுகாக்கும் பணியில் பங்கேற்குமாறும் பூங்காவின் இயக்குநர் டாக்டர் சஞ்சீத் குமார் அழைப்பு விடுத்தார்
பல்லுயிர் கண்காணிப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, பறவைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையிலான நடைப்பயண நிகழ்வின் 19-வது பதிப்பு நடைபெற்றது. பறவையியல் நிபுணர் டாக்டர் பரிதோஷ் அகமதுவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331287®=3&lang=1
***
TV/BR/GS