இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2026 6:40PM by PIB Chennai
விமானப்படை கிழக்குப் பிராந்திய படைப்பிரிவு தலைவராக ஏர் மார்ஷல் மெஹ்தாப் சிங் தேஸ்வால் 2026 நவம்பர் 1 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், 1989 ஜூன் 14- அன்று இந்திய விமானப்படையில் போர் விமானியாகப் பணியில் சேர்ந்தார். அவர் பல்வேறு போர் விமானங்களை இயக்குவதில் 3200 மணி நேரத்திற்கும் மேலான அனுபவம் கொண்டவர். தாக்குதல் விமானங்கள், வான் பாதுகாப்புப் பணிகளில் நிபுணத்துவம் பெற்ற மெஹ்தாப் சிங் தேஸ்வால், தகுதிபெற்ற விமான தாக்குதல் பயிற்றுநராகவும் உள்ளார்.
விமானப்படை தலைமையகத்தில் ஆயுத அமைப்புமுறைகளுக்கான தலைமை இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார். கிழக்குப் பிராந்திய படைப்பிரிவு தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன், இவர் தென்மேற்கு விமானப்படைத் தலைமையகத்தில் மூத்த விமானப்படை அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி, ஏர் மார்ஷல் தேஸ்வாலுக்கு அதி விசிஷ்ட் சேவா பதக்கமும், வாயு சேனா பதக்கமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331268®=3&lang=1
***
TV/BR/GS