பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2026 12:42PM by PIB Chennai

கர்நாடக மாநிலம் உருவான தினமான கன்னட ராஜ்யோத்சவத்தை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (01.11.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார். கர்நாடகா வளமான பாரம்பரியங்கள், குறிப்பிடத்தக்க சாதனைகள், அளவற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த பூமி என்று திரு மோடி நரேந்திர கூறியுள்ளார். அதன் புகழ்பெற்ற பாரம்பரியமும், காலத்தால் அழியாத பழக்கவழக்கங்களும் நமது தேசத்தின் கலாச்சாரக் கட்டமைப்பை வளப்படுத்தியுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக மக்கள் தங்களின் கடின உழைப்பு, தொழில்முனைவு, குறிப்பிடத்தக்க திறன்கள் ஆகியவற்றால், குறிப்பாக எதிர்காலத் துறைகளில், தங்களை சிறப்பாக காட்டியுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். தகவல் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளித் துறை ஆகியவை முதல் செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட உற்பத்தி, புத்தொழில் நிறுவனங்கள் ஆகியவை வரை, கர்நாடக மக்கள் மீண்டும் மீண்டும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளர்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"கர்நாடக மாநிலம் உருவான நாளில், மகிழ்ச்சிமிக்க இந்த தருணத்தில் கர்நாடக மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

கர்நாடகா, வளமான பாரம்பரியங்கள், குறிப்பிடத்தக்க சாதனைகள், அளவற்ற சாத்தியக்கூறுகள் நிறைந்த பூமியாகும். அதன் பெருமைமிக்க பாரம்பரியமும், காலத்தால் அழியாத பழக்கவழக்கங்களும் நமது தேசத்தின் கலாச்சாரக் கட்டமைப்பை வளப்படுத்தியுள்ளன.

கர்நாடக மக்கள் தங்களின் கடின உழைப்பு, தொழில்முனைவு, குறிப்பிடத்தக்க திறன்களால், குறிப்பாக எதிர்காலத் துறைகளில், தங்களை சிறப்பாக வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். தகவல் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம், விண்வெளித் துறை முதல் செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட உற்பத்தி, புத்தொழில் நிறுவனங்கள் வரை, கர்நாடக மக்கள் மீண்டும் மீண்டும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர். அழுத்தமான உலகளாவிய சவால்களுக்குத் தீர்வு வழங்குவதில் அவர்கள் முன்னணியில் உள்ளனர். இந்தச் சிறப்புத் தருணம் கர்நாடக மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்."

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331098&reg=3&lang=1

***

SK/PLM/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2331172) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Gujarati , Kannada , Malayalam