இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2026 10:52AM by PIB Chennai
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நாளை (2026 நவம்பர் 2) நடைபெறும் நட்சத்திர அந்தஸ்துக்கான (ஸ்டார் ரேட்டிங்) விருது வழங்கும் விழாவில், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி சுரங்கத் துறையில் முன்மாதிரியான சுரங்கங்கள் அங்கீகரிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள், செயல்பாட்டுத் திறன், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, தொழில்சார் சுகாதாரம், பாதுகாப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம், பொறுப்பான வள மேலாண்மை உள்ளிட்ட முக்கிய அளவுகோல்களில் சிறந்து விளங்கும் சுரங்கங்களின் சாதனைகளைக் கௌரவிக்கும்.
இவ்விழாவில் மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார். மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே கௌரவ விருந்தினராகவும், சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் சிறப்பு விருந்தினராகவும் கலந்துகொள்கின்றனர். மேலும், நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர், கூடுதல் செயலாளர், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோரும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.
நிலக்கரிச் சுரங்கங்களுக்கான நட்சத்திர மதிப்பீட்டுக் கொள்கையானது, நிலக்கரி, பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்திறனை ஒரு விரிவான அளவுகோல்கள் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட வழிமுறையை வழங்குகிறது. நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பால் நியமிக்கப்பட்ட மதிப்பாய்வாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படையில் சுரங்கங்களுக்கு, அதிகபட்சமாக ஐந்து நட்சத்திர அந்தஸ்து முதல் குறைந்த பட்சமாக பூஜ்யம் வரையிலான மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன.
இந்த விருதுகள், சுரங்க நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதோடு, நிலையான நடைமுறைகளைப் பின்பற்றுவதையும் ஊக்குவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331074®=3&lang=1
***
SK/PLM/PD