இடுகை இடப்பட்ட நாள்:
01 NOV 2026 10:52AM by PIB Chennai
இந்தியாவின் மொத்த நிலக்கரி இறக்குமதி, ஆகஸ்ட் 2025-ல் 111.05 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 2026-ல் 5.83% சரிந்து, 104.57 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இது 6.48 மில்லியன் டன் குறைவாகும். இறக்குமதி சார்பு நிலையைக் குறைக்கும் நோக்கில், உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்கவும், அதன் இருப்பை மேம்படுத்தவும், விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தவும் நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளால் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
* மின் உற்பத்தி நிலையங்களுக்கான நிலக்கரி இறக்குமதி, ஆகஸ்ட் 2025-ல் 22.77 மெட்ரிக் டன்னிலிருந்து ஆகஸ்ட் 2026-ல் 21.32 மெட்ரிக் டன்னாக, 6.39% குறைந்துள்ளது.
* இந்தியாவின் மொத்த நிலக்கரி நுகர்வில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் பங்கு, ஆகஸ்ட் 2025-ல் 21.20% ஆக இருந்ததிலிருந்து, ஆகஸ்ட் 2026-ல் 19.30% ஆகக் குறைந்துள்ளது.
உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியையும் நுகர்வையும் அதிகரிப்பது, நிலக்கரி சரக்குப் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி இருப்பு நிலைகளை உன்னிப்பாகக் கண்காணிப்பது ஆகியவற்றில் அமைச்சகம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.
ரயில்வே அமைச்சகம், கோல் இந்தியா லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள் ஆகியவற்றுடன் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள், மின்சாரப் பயன்பாட்டு நிறுவனங்களுக்கு நிலக்கரியை உரிய நேரத்திலும் போதுமான அளவிலும் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331073®=3&lang=1
***
SK/PLM/PD