தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 74-வது நிறுவன தின விழாவை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நாளை புது தில்லியில் தொடங்கி வைக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 OCT 2026 4:59PM by PIB Chennai

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தனது 74-வது நிறுவன தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியை மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா புதுதில்லியில் நாளை  தொடங்கி வைக்கிறார்.

இந்நிகழ்ச்சியில், மத்திய தொழிலாளர்,வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய அறங்காவலர் வாரிய உறுப்பினர்கள், இபிஎப்ஓ அமைப்பின் அதிகாரிகள், பணியாளர்கள், முதலாளிகள், தொழிலாளர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, இபிஎஃப்ஓ அமைப்பின்  முக்கிய முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். இதில், ரூ 1,000 வரை இருப்புத் தொகை கொண்ட, நீண்டகாலமாகச் செயல்பாட்டில் இல்லாத கணக்குகளைத் தானாகவே தீர்வு செய்யும் வசதி, வாட்ஸ்அப் வாயிலாக இபிஎஃப்ஓ சேவைகளை வழங்கும் வசதி போன்றவை அடங்கும்.

 

மேலும், விழாவிற்காக அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளைப் பார்வையிடும் மத்திய அமைச்சர், அறிவு உருவாக்கம், நிறுவனக் கற்றல், சட்ட விழிப்புணர்வு, கனிவான நிர்வாகம் ஆகியவற்றில் இபிஎஃப்ஓ அமைப்பு  கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறும்.

இதனுடன், மண்டல அலுவலகங்கள், மண்டல அளவிலான பிரிவுகள்,  தனிப்பட்ட அதிகாரிகள், பணியாளர்களின் சிறப்பான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, 'பவிஷ்ய நிதி விருதுகள் 2026' -ஐயும்  மன்சுக் மாண்டவியா வழங்குகிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330894®=3&lang=1

(Release ID: 2330894)

****

TV/SV/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330972) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Malayalam , Urdu , हिन्दी