இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2026 3:34PM by PIB Chennai
இந்திய விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங், இன்று (2026 அக்டோபர் 31) பணி ஓய்வு பெறுகிறார். இதன் மூலம், நாட்டிற்கு 42 ஆண்டுகள் மிகச் சிறந்த சேவையாற்றிய அவரது புகழ்பெற்ற பணி வாழ்க்கை நிறைவடைகிறது.
திறமையான போர் விமானியாகவும், சோதனை விமானியாகவும் பணியாற்றிய அவர், இந்திய விமானப்படையின் செயல்பாட்டுத் திறன், போர் புரிவதற்கான தயார்நிலை, நவீனமயமாக்கல் ஆகியவற்றில் முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.
விமானப்படைத் தளபதியாக அவர் பணியாற்றிய காலத்தில், உறுதியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதுடன, செயல்பாட்டுத் தயார்நிலைக்கு உயர் முன்னுரிமை வழங்கினார். குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை, தனது போர்த் திறன், துல்லியமான செயல்பாடுகள், தேசிய இலக்குகளை அடைவதற்கான உறுதியை வெளிப்படுத்தியது. அவரது தலைமைத்துவம், பல்வேறு வகையான செயல்பாட்டுச் சூழல்களில், இந்திய விமானப்படை துணிச்சலுடனும், உறுதியுடனும் செயல்படும் திறனை மேலும் வலுப்படுத்தியது.
செயல்பாட்டுத் தலைமைத்துவத்தைக் கடந்து, இந்திய விமானப்படையின் அனைத்து நிலைகளிலும் உள்ள வீரர்களுடன், அவர் கொண்டிருந்த வலுவான, தனிப்பட்ட பிணைப்புக்காக ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
அடிப்படை நிலையில் உள்ள பணியாளர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்புகள், இந்திய விமானப்படையின் உண்மையான வலிமை, அதன் மனித வளத்தில்தான் உள்ளது என்ற அவரது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் இருந்தன. படைப்பிரிவின் கடைநிலை வீரர் முதல், இளம் அதிகாரிகள், விமானப்படை வீரர்கள், பயிற்சி மாணவர்கள் வரை, அனைவரிடமும் அவர் தொழில்முறை அடிப்படையிலான செயல்பாடுகள், பொறுப்புக்கூறல், முன்முயற்சி, பணியின் மீதான பெருமிதம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
இளம் தலைமுறையினருடன் எளிதாக இணைந்து செயல்படும் அவரது திறனும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமும், அடுத்த தலைமுறை விமானப்படை வீரர்களையும், தலைவர்களையும் உருவாக்குவதில் அவர் கொண்டிருந்த அக்கறையை உணர்த்துவதாக உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330848®=3&lang=1
(Release ID: 2330848)
****
TV/SV/SH