இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2026 12:48PM by PIB Chennai
வேளாண் ஆராய்ச்சித் துறை-இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் , தூய்மை பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் ஒரு பகுதியாக, அலுவலகச் சூழலை மேம்படுத்துதல், கழிவுகளை முறையாகப் பிரித்தல், கையாளுதல், பயன்படுத்தக்கூடிய பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பணியாளர்கள், விவசாயிகள், உள்ளூர்வாசிகளை உள்ளடக்கிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
இந்த இயக்கத்தின் கீழ், ஆவண மேலாண்மை, டிஜிட்டல்மயமாக்கல், மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிளைகளிலும் தூய்மைப் பணிகள், மக்கள் சார்ந்த செயல்பாடுகள், தேவையற்ற பொருட்களை அகற்றுதல், மின்னணுக் கழிவு மேலாண்மை, அலுவலக இடங்களை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அந்தந்த நிறுவனங்கள், தங்களது அலுவலக வளாகத்திற்குள் அல்லது சுற்றியுள்ள பகுதிகளில் தூய்மையற்ற இடங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சுத்தப்படுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
தூய்மையின் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் உணர்த்தும் வகையில், பணியிட வளாகங்களில் விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
பல வளாகங்களில் இலவச மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தூய்மைப் பணியாளர்களை கௌரவிக்கும் நடைமுறையும் தொடர்ந்து பின்பற்றப்படுகிறது. அலுவலக வளாகத்திற்குள்ளும், வெளிப்புறத்திலும், அனைத்து நிலை அதிகாரிகளும் தூய்மைப் பணிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பது பாராட்டுக்குரியது. பண்ணைகள், வயல்வெளிகள், வளாகத்தைச் சுற்றியுள்ள சாலைகளில் விரிவான தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, உலோகம், பிளாஸ்டிக் கழிவுகளைப் பொதுக் கழிவுகளிலிருந்து தனித்தனியாகப் பிரிப்பதன் மூலம், தூய்மை, ஒழுங்கமைப்பு, கழிவு மேலாண்மை நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330771®=3&lang=1
(Release ID: 2330771)
****
SS/SV/SH