சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2026 11:36AM by PIB Chennai
நாட்டின் ஒருங்கிணைப்பு, ஒற்றுமைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம், தேசிய ஒற்றுமை தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இத்தினத்தையொட்டி, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜே பி நட்டா, புதுதில்லியில் உள்ள கடமை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள், பணியாளர்களுக்கு தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியைச் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திருமதி புண்யா சலீலா ஸ்ரீவஸ்தவா, ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ரா, பெட்ரோ கெமிக்கல்ஸ் துறை செயலாளர் திரு தேஜ்வீர் சிங், சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பால், சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் டாக்டர் லவ்னீஷ் ஜி கிருஷ்ணா, தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுனில் குமார் பார்ன்வால் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம், ரசாயனம், உரத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த பிற உயர் அதிகாரிகளும், பணியாளர்களும் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330752®=3&lang=1
(Release ID: 2330752)
****
SS/SV/SH