இடுகை இடப்பட்ட நாள்:
31 OCT 2026 9:10AM by PIB Chennai
பிரதமரின் கிராமச் சாலைத் திட்டத்தின் (பிஎம்ஜிஎஸ்ஒய்-IV) (தொகுதி-1, நிதியாண்டு 2026-27) நான்காம் கட்டப் பணிகளின் கீழ், மொத்தம் ரூ 710.40 கோடி மதிப்பீட்டில், 45 சாலைப் பணிகளுக்கு (509.54 கி.மீ) மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தத் திட்டம், இதுவரை சாலை வசதி இல்லாத 48 குடியிருப்புகளுக்கு, அனைத்து பருவநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய சாலை இணைப்பை முதன்முறையாக வழங்கவுள்ளன. இத்தகைய சாலை வசதிகள் கிடைப்பதன் மூலம், அப்பகுதி மக்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், கிராமப்புறச் சந்தைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளைப் பெற முடியும். இது அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு முக்கிய பங்களிப்பை வழங்கும். மேலும், இது மத்திய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும்.
இந்த சாலை இணைப்பை தவிர பிஎம்ஜிஎஸ்ஒய் திட்டத்தின் கீழ், இதுவரை மிசோரமில், ரூ.3,412 கோடி மதிப்பீட்டில், 367 சாலைப் பணிகளுக்கும் (4,935 கி.மீ), 7 பாலங்கள் கட்டுமானப் பணிகளுக்கும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330725®=3&lang=1
(Release ID: 2330725)
****
SS/SV/SH