தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 2:44PM by PIB Chennai
ஜம்மு காஷ்மீரின் லே, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் சேவைகளின் தரநிலைக் குறித்த மதிப்பீடுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) வெளியிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களின் மொபைல் சேவை (குரல், தரவு) தரநிலை குறித்த மதிப்பீடுகள் வாடிக்கையாளர்களின் தகவலுக்காகவும், சேவை வழங்கும் நிறுவனங்களின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் வெளியிடப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் அழைப்பின் இணைப்பு விகிதம், துண்டிப்பு விகிதம், தரவு பதிவேற்றம், பதிவிறக்கத்தின் வேகம் போன்ற பல்வேறு முக்கிய அம்சங்களில் மொபைல் சேவைகளின் தரநிலை குறித்து மதிப்பிடப்படுகிறது.
நகர்ப்புறப் பகுதிகள் முக்கியத்துவம் வாய்ந்தப் பகுதிகள், பொதுப் போக்குவரத்து மையங்கள் போன்ற பல்வேறு சூழல்களில் மொபைல் சேவைகள் செயல்பாடு குறித்து நேரடியாகக் கண்டறியும் வகையில் இந்தச் சோதனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330377®=48&lang=1
***
SS/SV/SU/ SH