பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் நியமன செயல்முறைகளில் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நிர்வாகப் பங்கை மட்டுமே ஆற்றுகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 6:33PM by PIB Chennai

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் தொடர்பான பணியாளர் விவகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய சில அறிவுறுத்தல்களின் அடிப்படையில், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்துக்கு குறிப்பிட்ட பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

 

தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் 63 நீதித்துறை, தொழில்நுட்ப உறுப்பினர்களுக்கான நியமனச் செயல்முறையை நடத்துவதில், பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம் நிர்வாகப் பங்கை மட்டுமே ஆற்றுகிறது.

 

துணைப் பதிவாளர்கள், நீதிமன்ற அலுவலர்கள், சுருக்கெழுத்தாளர்கள், அலுவலக உதவியாளர்கள், பல்பணி ஊழியர்கள் உள்ளிட்ட அதன் அலுவலர்கள், பணியாளர்களின் நியமன, மேலாண்மை செயல்முறையை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் தன்னிச்சையாக மேற்கொள்கிறது. அதன் திறன்வாய்ந்த, தன்னிச்சையான செயல்பாட்டை உறுதி செய்யும் நோக்கில், 14 அக்டோபர் 2019 தேதியிட்ட அறிவிக்கையின் மூலம் அரசு இந்தப் பொறுப்பை தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்துக்கு வழங்கியது.

 

மேலும் விவரங்களுக்கு இது ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330547&reg=3&lang=1

 

(Release ID : 2330547)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330686) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi , Malayalam