இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 6:48PM by PIB Chennai
ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் இந்தியப் பயணிகள் இப்போது யுபிஐ மூலம் எளிதாக முன்பதிவு செய்யலாம். உலகின் முதன்மையான இரண்டு இடங்களுக்குப் பயணம் செய்யத் திட்டமிடும் இந்தியப் பயணிகள், தங்களுக்கு விருப்பமான ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை இடைமுகமான யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி, இப்போது அனுபவங்களை எளிதாக முன்பதிவு செய்யவும், ஆன்லைனில் பணம் செலுத்தவும் முடியும். உலகெங்கிலும் உள்ள இந்தியப் பயணிகளுக்கு, பணப்பரிவர்த்தனையில் தடைகளற்ற எளிதான பயணத் திட்டமிடலைச் சாத்தியமாக்குவதில் இந்த முன்னேற்றம் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இந்திய தேசிய பணப்ரிவர்த்தனைக் கழகத்தின் சர்வதேசப் பிரிவான என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட், இணையவழி முன்பதிவுகளுக்கு யுபிஐ-ஐ செயல்படுத்தும் நோக்கில், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூருடன் முறையே 29 ஜூலை 2026, 9 செப்டம்பர் 2026 ஆகிய நாட்களில் கூட்டு செயல்பாட்டை அறிவித்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் புர்ஜ் கலிஃபா போன்ற உலகத் தரம் வாய்ந்த இடங்களையும், யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர், சிங்கப்பூர் ஓஷனேரியம் மற்றும் அட்வென்ச்சர் கோவ் வாட்டர்பார்க் உள்ளிட்ட புகழ்பெற்ற ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசா சுற்றுலாத் தலங்களையும் யுபிஐ-ஐ ஒருங்கிணைப்பது, நம்பகமான எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை அனுபவங்களுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இது இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் இடையிலான டிஜிட்டல், பொருளாதாரப் பாலத்தை வலுப்படுத்துவதோடு, இந்தியப் பயணிகளுக்குத் தடையற்ற, பாதுகாப்பான பரிவர்த்தனையை வழங்குகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330558®=3&lang=1
(Release ID : 2330558)
****
SK/PLM/SH