இடுகை இடப்பட்ட நாள்:
30 OCT 2026 5:43PM by PIB Chennai
வடகிழக்குப் மாநிலங்கள் மேம்பாட்டு அமைச்சகமும் அதன் அமைப்புகளும், நிர்வாக சீர்திருத்தங்கள் துறையால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க, சிறப்புத் தூய்மை இயக்கம் 6.0-ஐ தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றன. இந்த இயக்கம், தூய்மையை மேம்படுத்துதல், அலுவலக இடத்தை உகந்த முறையில் பயன்படுத்துதல், ஆவண மேலாண்மையை வலுப்படுத்துதல், நிலுவையில் உள்ள குறைகளை உரிய நேரத்தில் தீர்த்து வைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இன்று (2026 அக்டோபர் 30 வரை, வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டு அமைச்சகமும் அதன் அமைப்புகளும், இந்த இயக்கத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை நோக்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. மொத்தம் 11 தூய்மை இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. 5,650 என்ற இலக்கிற்கு எதிராக 4,052 மின்னணுக் கோப்புகள் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. மேலும் 1,160 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தின் முன்னேற்றங்களும் சாதனைகளும் சமூக ஊடகத் தளங்களில் பல பதிவுகள் மூலம் பரப்பப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330508®=3&lang=1&_gl=1
(Release ID : 2330508)
****
SK/PLM/SH