நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வடகிழக்கு மாநிலங்களில் 50 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 5:00PM by PIB Chennai

இந்திய எல்லைப் பகுதிகளில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில், வடகிழக்கு மாநிலங்களில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், மிசோரம் மாநிலம், சாம்பாய் பகுதியில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, மரப்பலகையில் அறைகள் அமைத்து அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 30 கிலோ எடையுள்ள போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதேபோல், அசாம் மாநிலம் தோலாய் என்ற இடத்தில் நடந்த அதிரடி சோதனையின்போது 20 கிலோ எடையுள்ள மெத்தம்பட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரண்டு கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டன. மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மியான்மரில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சமீபத்தில் சுமார் 232 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் பிடிபட்டதாக தெரிவித்த வருவாய் புலனாய்வு அதிகாரிகள், எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் கூறினர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330453&reg=3&lang=1

****

SK/LN/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330666) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu