பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செமிகண்டெக்டர், அடுத்த தலைமுறைக்கான சிப் வடிவமைப்புக் குறித்த மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் சிறப்பு கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 4:51PM by PIB Chennai

வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் குறித்த மாநாடு புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது.  அக்டோபர் 27-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆக்கப்பூர்வமானச் சிந்தனைகள் சமூக பயன்பாட்டிற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த விவாதங்கள் செமிகண்டெக்டர், அடுத்த தலைமுறைக்கான சிப் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த சிறப்பு விவாத அமர்வுகள் நடைபெற்றன. 

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் வழிகாட்டுதலின் பேரில் 12 அமைச்சங்கள் / துறைகள் இணைந்து இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் ஏற்பாடுச் செய்திருந்த சிறப்பு அமர்வில் செமிகண்டெக்டர், அடுத்த தலைமுறைக்கான சிப் வடிவமைப்புக் குறித்த விவாதம் நடைபெற்றது.  இந்த அமர்வில் செமிகண்டெக்டர் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் குறித்தும், குறிப்பிட்ட பயன்பாட்டிற்கான செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் துறை சார்ந்த நிபுணர்கள் விவாதித்தனர். 

நவீன சிப்புகளை வடிவமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும், உள்நாட்டு தொழில்நுட்பங்களை வலுப்படுத்தவும் டிஆர்டிஓ மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் குறித்தும் இதில் எடுத்துரைக்கப்பட்டன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக டிஆர்டிஓ ஏற்பாடு செய்திருந்த கண்காட்சி அரங்கில் பாதுகாப்பு அமைச்சகத்தின் சாதனைகள், ஆராய்ச்சித் திட்டங்கள் அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கத் துறையில் அதன் பங்களிப்புகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330447&reg=3&lang=1&_gl=1

****

SK/SV/SU/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2330595) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Telugu