இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 8:33PM by PIB Chennai
மத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு அமைச்சகத்தின், இளையோர் விவகாரங்கள் துறையின் கீழ் இயங்கும் மை பாரத் இளையோர் அமைப்பு, இன்று 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள கல்லூரிகள், நிறுவனங்களில் 'வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இளையோர் கலந்துரையாடல்: உங்கள் வாக்கை அறிந்துகொள்ளுங்கள்' என்ற நிகழ்வின் 23-வது பதிப்பை நடத்தியது.
இதில் 5,481 இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த முன்னெடுப்பின் நோக்கம், இளைஞர்கள், குறிப்பாக முதல் முறை வாக்களிப்பவர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், வாக்களிக்கும் உரிமைகள், தேர்தல் நடைமுறைகள், குடிமைப் பொறுப்புகள் குறித்து அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் ஜனநாயகச் செயல்பாட்டில் தகவலறிந்த பங்கேற்பை ஊக்குவிப்பதும் ஆகும்.
அக்டோபர் 26 முதல் நவம்பர் 5, 2026 வரை 500 பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் நடத்தப்படும் இந்த நாடு தழுவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அக்டோபர் 29 நிலவரப்படி, 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 50 இளைஞர் மன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 11,787 இளைஞர்களும் 51 இளைஞர் சின்னங்களும் பங்கேற்றனர். ஜனநாயகப் பங்கேற்பு, குடிமைப் பொறுப்புகள் மற்றும் தேசத்தைக் கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கு ஆகியவை குறித்த கலந்துரையாடல்களுக்காக, இந்த அமர்வுகள் இளைஞர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர் சின்னங்களை ஒன்றிணைக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330240®=3&lang=1
***
SK/SV/PS