சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 7:55PM by PIB Chennai
அசாம் மாநிலம், குவஹாத்தியின் கானாபாராவில் உள்ள 'ஃபார்ம் கேட்' பகுதியில் எட்டு நாட்களாக நடைபெற்ற கைவினைக் கலைஞர்களின் சங்கம விழா நிறைவடைந்தது. இந்த நிகழ்வு பார்வையாளர்கள், உள்ளூர் மக்கள், கைவினைஞர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, பாரம்பரிய கைவினைஞர்களுக்குத் தங்கள் கலைப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவும், வாடிக்கையாளர்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும், சமூக-பொருளாதார ரீதியாகத் தற்சார்பு பெறவும் ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
கர்நாடக மாநிலம் மைசூருவில் அக்டோபர் 19 அன்று நடைபெற்ற முதல் நிகழ்வைத் தொடர்ந்து, 2026-27 நிதியாண்டிற்கான 'கைவினைக் கலைஞர்களின் சங்கம விழா' தொடரின் இரண்டாவது நிகழ்வாக குவஹாத்தி பதிப்பு அமைந்தது.
இந்த எட்டு நாள் நிகழ்வு, தொழில்முனைவோரை ஊக்குவித்தல், சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், பட்டியல் சாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தூய்மைப் பணியாளர்கள், அறிவிக்கப்படாத பழங்குடியினர் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்த கைவினைஞர்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குதல் ஆகிய அதன் முக்கிய நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்ததாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330226®=3&lang=1
***
SK/SV/PS