கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தில் புத்தரின் புனிதப் பொருட்கள் பொதுமக்கள் வழிபாட்டிற்காகக் காட்சிப்படுத்தப்படுகின்றன

இடுகை இடப்பட்ட நாள்: 30 OCT 2026 10:35AM by PIB Chennai

மத்திய கலாச்சார அமைச்சகம், அருணாச்சலப் பிரதேச மாநில அரசு, சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவை இணைந்து புத்தரின் புனிதப் பொருட்களை, 2026 அக்டோபர் 31 முதல் நவம்பர் 21 வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காகக் காட்சிப்படுத்துகின்றன. தவாங், பொம்டிலா, நாம்சாய் ஆகிய மூன்று முக்கிய பௌத்த வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் இந்த புனிதப் பொருட்களைத் தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தவாங்கில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த மடாலயத்தில் 2026 அக்டோபர் 31 அன்று நடைபெறும் தொடக்க விழாவில் மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் கலந்து கொள்கிறார். புதுதில்லி தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் புத்தரின் புனிதப் பொருட்கள், இந்திய விமானப்படையின் சிறப்பு விமானங்கள் மூலம் பாதுகாப்பாக அருணாச்சலப் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

புத்தரின் புனிதப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட வரலாறு குறித்த சிறப்பு கண்காட்சியும், இமயமலைப் பகுதியில் பௌத்தத்தின் பரவல் குறித்த சர்வதேச மாநாடும் தவாங்கில் நடைபெறவுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330300&reg=48&lang=1&_gl=1

***

SS/PD/PS


(வெளியீட்டு அடையாள எண்: 2330404) வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी