குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 9:29PM by PIB Chennai
மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம், சுயவேலைவாய்ப்பு மற்றும் அடிப்படை அளவிலான தொழில்முனைவோரை ஊக்குவிப்பதில் மற்றொரு முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. இதன்படி, பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் கீழ் ரூ 1,000 கோடி சொந்த முதலீட்டுப் பங்களிப்புத் தொகைக்கான மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் உள்ள கடமை மாளிகை-3-ல், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில், அத்துறைக்கான மத்திய அமைச்சர் திரு ஜிதன் ராம் மஞ்சி இந்த மானியத் தொகையை விடுவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் திருமதி ஷோபா கரந்தலாஜே, அமைச்சகச் செயலாளர் திரு பரத் கேரா, அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தேசிய சிறு தொழில்கள் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் 11,333 பயனாளிகள், பல்வேறு துறைகளில் புதிய சிறு தொழில் நிறுவனங்களை அமைப்பதற்காக, வங்கிகளால் அனுமதிக்கப்பட்ட ரூ 3,260 கோடி மதிப்பிலான திட்டக் கடனுதவிகளைப் பெற்றுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329819®=3&lang=1
(Release ID: 2329819)
SK/SV/SH