இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 6:49PM by PIB Chennai
மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, புதுதில்லியில் உள்ள தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாகக் கழகத்தின் (என்ஐஇபிஏ) புதிய கல்வி வளாகக் கட்டிடத்தையும், முதன்மை நுழைவு வாயிலையும் இன்று திறந்து வைத்தார். இந்த புதிய கட்டிடம், அந்த நிறுவனம் தனது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திட்டங்களை விரிவுபடுத்தவும், அதன் கல்வி மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்தவும் உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அமலாக்கத்தைக் கண்காணிப்பதிலும், அமலாக்கத்தில் உள்ள சவால்களைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுவதிலும் என்ஐஇபிஏ வகிக்கும் பங்கினை திரு ஜோஷி எடுத்துரைத்தார். மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020-ல் குறிப்பிட்டுள்ளபடி, மனப்பாடம் செய்யும் முறையிலிருந்து கருத்துகளைப் புரிந்துகொள்ளும் முறைக்கு மாறுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் உயர்கல்வித் துறைச் செயலாளர் திருமதி தீப்தி கௌர் முகர்ஜி, என்ஐஇபிஏ வேந்தர் பேராசிரியர் ராம சங்கர் தூபே, துணைவேந்தர் பேராசிரியர் சசிகலா வஞ்சாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330174®=3&lang=1
****
SK/BR/SH