இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 5:39PM by PIB Chennai
சிறப்பு இயக்கம் 6.0-ன் நோக்கங்களான தூய்மை பணி, சிறந்த அலுவலக மேலாண்மை, நீடித்த நிர்வாகம் ஆகியவற்றை அடைவதில் அர்ப்பணிப்புடன் சிறந்த பங்களிப்பை மேற்கொண்ட இந்திய சணல் கழகத்திற்கு மத்திய ஜவுளி அமைச்சகம் பாரட்டுத் தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக பல்வேறு தூய்மை பணிகள், பணியிடங்களில் நடவடிக்கைகளை மேம்படுத்துதல், காலாவதியான, தேவையற்ற பொருட்களை அகற்றுதல், தூய்மையை ஊக்குவித்தல், ஆக்கப்பூர்வமான பணிச்சூழல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்திய சணல் கழகம் பல்வேறு பணிகளை மேற்கொண்டது.
2026 அக்டோபர் 2-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை அன்னையின் பெயரில் ஒரு மரக்கன்று, ஆவண மேலாண்மை, இட மேலாண்மை திட்டமிடல், கழிவுப் பொருட்களை அகற்றுதல், ஆவண அறைகள் மற்றும் சேமிப்பு பிரிவுகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகிய பணிகளை இந்திய சணல் கழகம் மேற்கொண்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330119®=3&lang=1&_gl=1
****
SK/IR/GS/SH