இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 5:45PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவு மூலம் செழுமை என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் வகையிலும், சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கூட்டுறவு சார்ந்த மேம்பாட்டை விரைவுபடுத்தும் வகையிலும், தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் 93-வது பொதுக்குழு கூட்டம் மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் நிதி மற்றும் நிறுவனம் சார்ந்த சாதனைகள், கூட்டுறவுத் துறையில் கடன் வசதிகளை விரிவுபடுத்துதல், புதிய பன்மாநில கூட்டுறவு சங்கங்களை அமைத்தல், கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் இக்கழகத்தின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்த பல்வேறு அம்சங்கள் தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் திரு அமித் ஷா, கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் சிறப்பாக செயல்பட்டதாகக் கூறினார். நிதிசார்ந்த செயல்பாடுகளிலும், இலக்குகளை அடைவதிலும் சிறப்பான முன்னேற்றத்தை அடைந்தது மட்டுமின்றி தொழிலாளர்களுக்கான லாபத்தை அதிகரித்தல், கடன் வழங்குதலை விரிவுபடுத்துதல், நிகர வாரக் கடனை பூஜ்ஜியமாக பராமரித்தல் ஆகிய சாதனைகளையும் படைத்துள்ளதாகத் தெரிவித்தார். நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் திருப்தி தெரிவித்தார். லடாக் போன்ற தொலைதூர பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களில் அலுவலகங்களை ஏற்படுத்தியது, கூட்டுறவு இயக்கத்தை நாட்டின் மிக தொலைதூர பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்கான முக்கிய நடவடிக்கை என்று கூறினார். இச்சாதனைகளுக்காக தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330122®=3&lang=1&_gl=1
****
SK/IR/GS/SH