இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 5:52PM by PIB Chennai
நர்மதா கட்டுப்பாட்டு ஆணையத்திற்கான மறுஆய்வுக் குழுவின் 15-வது கூட்டம், 2026 அக்டோபர் 27 அன்று காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. மத்திய ஜல் சக்தி அமைச்சரும், அதன் தலைவருமான திரு சி ஆர் பாட்டீல் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர படேல், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்தியப் பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன் லால் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், நாட்டின் தலைமை வழக்கறிஞரின் கருத்து, 2026 ஜூலை 7 அன்று புது தில்லியில் நான்கு மாநிலங்களுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன. மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மத்திய ஜல் சக்தி அமைச்சர் திரு சி ஆர் பாட்டீல் ஆகியோரின் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தம், மாநிலங்களுக்கு இடையிலான நிலுவையில் உள்ள அனைத்துக் கோரிக்கைகள், நிதிப் பொறுப்புகளை ஒரே கட்டத் தீர்வு மூலம் முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதற்கான வழிமுறைகளும் இக்கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2330127®=3&lang=1
****
SK/IR/GS/SH