சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
முதியோருக்கான சுகாதார திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 6 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்
இடுகை இடப்பட்ட நாள்:
29 OCT 2026 3:33PM by PIB Chennai
70 வயதை கடந்தவர்கள் பயன்பெறும் வகையில், 2024 அக்டோபர் 29-ம் தேதி முதியோருக்கான சுகாதார திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி வெற்றிகரமாக 2 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இதுவரை 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர். இதில், கட்டணம் இன்றியும், கண்ணியமான முறையிலும் மூத்த குடிமக்கள் சிகிச்சை பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் 23.46 லட்சம் பேர் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இதற்காக செலவிடப்பட்ட தொகை ரூ.5,668.80 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கண்புரை அறுவை சிகிச்சை முதல் இதய சிகிச்சை வரை மூத்த குடிமக்கள் பயன்பெற்றுள்ளனர். இதய சிகிச்சைக்காக மட்டும் சுமார் ரூ.649 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2330009®=3&lang=1&_gl=1
***
SS/LN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2330188)
வருகையாளர் எண்ணிக்கை : 15