அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல், புத்தாக்கத்தை மாற்றியமைப்பதில் இயற்பியல் செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ்-ன் பங்கு குறித்த கருத்தரங்கு

இடுகை இடப்பட்ட நாள்: 29 OCT 2026 12:16PM by PIB Chennai

மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை சார்பில், தன்னாட்சி அமைப்புகள், இயற்பியல் செயற்கை தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ் மூலம், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பங்கள், புத்தாக்கம் ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கருத்தரங்கு புதுதில்லியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், கல்வியாளர்கள், தொழில்துறையினர், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றிய அறிவியல், தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு உமேஷ் வி வாக்மாரே, தன்னாட்சி அமைப்புகள், இயற்பியல் செயற்கை நுண்ணறிவு, அறிவியல் ஆகியவற்றை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு, தொழில்துறையினர், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், புத்தாக்க நிறுவனங்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் ஆகியோர் இணைந்து செயல்படுவது அவசியம் என தெரிவித்தார். சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில், ஆராய்ச்சியை நடைமுறைப்படுத்துவதில் அனைவரின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அறிவுறுத்தினார்.

நாடு முழுவதும் 25 முன்னணி கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கல்வி நிறுவனங்கள், தொழில்நிறுவனங்கள், புத்தாக்க நிறுவனங்கள் ஆகியவற்றை இணைக்கும் பாலமாக தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் கூறினார். அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் முதலீடு செய்யும் வகையிலும், முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையிலும் இந்த கருத்தரங்கு நடைபெற்றது. தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது, புதுமையை புகுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்து.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329907&reg=3&lang=1

***

SS/LN/GS/PS 


(வெளியீட்டு அடையாள எண்: 2330065) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR