பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 6:46PM by PIB Chennai
தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ரூ 49.46 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், அதன் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், பிற அமைப்புகளுடன் இணைந்து, தூய்மை பராமரிப்பிற்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பணியிடங்களைத் தூய்மை செய்வதன் வாயிலாக 3.42 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான இடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், கழிவுப் பொருட்கள் மற்றும் மின்னணுக் கழிவுகளை அகற்றியதன் மூலம் சுற்றுப்புறத் தூய்மையைப் பராமரிப்பதுடன் வருவாய் ஈட்டுவதற்கு இந்த சிறப்புத் தூய்மை இயக்கம் வகை செய்கிறது
ஆவணங்களைச் சீராக நிர்வகித்தல், கழிவுப் பொருட்கள் மின்னணுக் கழிவுகளை அகற்றுதல், அலுவலக இடங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவற்றில் இந்த இயக்கம் கவனம் செலுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329700®=3&lang=1
***
SK/SV/PS