இடுகை இடப்பட்ட நாள்:
28 OCT 2026 6:12PM by PIB Chennai
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான இணையதளத்தை மத்திய ஜவுளி அமைச்சகம் விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவர உள்ளது. இத்திட்டத்தின் இரண்டாம் பகுதிக்கான குறைந்தபட்ச விற்பனை வரவிற்கான உச்சவரம்பு ரூ.100 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை இழை ஆயத்த ஆடைகள், துணிகள், தொழில்நுட்ப ஜவுளிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கவும், உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், உலகளவில் ஜவுளி விநியோக நடைமுறைகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும், மத்திய ஜவுளி அமைச்சகம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தின் 4-வது கட்டத்தின் கீழ், புதிய விண்ணப்பங்களைப் பெறுவதற்காக, அதற்கான இணையதளத்தை 2026 நவம்பர் 1 முதல் 2026 டிசம்பர் 31 வரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரவுள்ளது.
ஆன்லைன் விண்ணப்ப இணையதளமான https://pli.texmin.gov.in, 2026 நவம்பர் 1 முதல் 2026 டிசம்பர் 31 வரை செயல்பாட்டில் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329667®=3&lang=1
***
SK/SV/PS