மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியா பில்டத்தான் 2025-ன் வெற்றியாளர்களைக் கௌரவித்தார், மத்திய அமைச்சர் ஜெயந்த் சௌத்ரி

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 7:22PM by PIB Chennai

புதுதில்லியில் இன்று நடைபெற்ற வளர்ச்சியடைந்த இந்தியா பில்டத்தான் 2025 நிகழ்வில், மத்திய கல்வித்துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி, தேசிய அளவில் வெற்றி பெற்ற 10 குழுக்களையும் புத்தாக்கச் சிந்தனையாளர்களையும் கௌரவித்தார். ‘மிகப்பெரிய புத்தாக்கத் தீர்வுப் போட்டி’ என்பதற்கான கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழும் இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, யு.எல்.எல்.ஏ.எஸ்- நவ பாரத் சாக்‌ஷர்தா காரியக்ரம் திட்டத்தின் கீழ், ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் வெளியிட்டார். மேலும், மின்னணுக் கழிவுகள் குறித்த வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜெயந்த் சௌத்ரி, குழந்தைகளை எதிர்காலத் தலைவர்களாக உருவாக்குவதற்கு, அவர்களிடையே தன்னம்பிக்கை, படைப்பாற்றல், புதுமை, சுயசிந்தனையை  வளர்ப்பதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். மின்னணுக் கழிவுகள் தொடர்பான சவால் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதில் பள்ளி மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது, நிறுவனங்கள், சமூகங்கள், குடிமக்களின் கூட்டுப் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329723&reg=3&lang=1

****

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329848) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी