மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தூதுக்குழு பிரதிநிதிகளுடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 7:15PM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவையின் தலைவருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழுவின் தூதுக்குழுப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார்.

திரு டேவிட் மெக்அலிஸ்டர் தலைமையிலான இந்தத் தூதுக்குழுவிகருடன் புது தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, கடந்த சில ஆண்டுகளில் இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையேயான உறவுகள் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்த நல்லுறவை முன்னெடுத்துச் சென்றதற்காக இந்தியா - ஐரோப்பிய யூனியனின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த நட்புறவின் பொதுவான அடித்தளம் குறித்து வலியுறுத்திய அவர், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாகவும், வெளிப்படையான சந்தைப் பொருளாதாரங்களைக் கொண்டவையாகவும், பன்முகத்தன்மை சமூகங்களைக் கொண்டவையாகவும் திகழும் இந்தியாவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும், ஒரு வலுவான, பன்முனை உலக ஒழுங்கை உருவாக்குவதில் பொதுவான ஆர்வத்தைக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

ஐரோப்பிய ஆணையத் தலைவர்கள் குழு, அதன் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயன் தலைமையில், ஒட்டுமொத்த அரசு நிர்வாக அணுகுமுறையுடன் மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட நிறுவன ரீதியான பிணைப்புகள், பயனுள்ள முடிவுகளை அளித்துள்ளன என்று அவர் கூறினார்.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஆகியோர் இந்தியக் குடியரசு தின விழாவில் கௌரவ விருந்தினர்களாகப் பங்கேற்றதை அவர் நினைவுகூர்ந்தார். 16-வது இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சிமாநாட்டிற்காக அவர்கள் மேற்கொண்ட அரசுமுறைப் பயணம், இந்த இருதரப்பு உறவிற்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

வர்த்தகம், முதலீடு குறித்துக் குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் இணைந்து, 25 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சந்தையையும், ஏறக்குறைய இரண்டு பில்லியன் மக்கள் தொகையையும் கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329718&reg=3&lang=1

****

SK/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329840) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi