சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச பல்லுயிர் பெருக்க உறுதிமொழிகளை நடைமுறை செயல்பாடுகளாக மாற்ற வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 4:01PM by PIB Chennai

அர்மீனியாவின் யெரெவான் நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் உயிரி பன்முகத்தன்மை மாநாட்டின் 17-வது உறுப்பு நாடுகள் கூட்டம் (சிஓபி-17) நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், சர்வதேச பல்லுயிர் பெருக்க உறுதிமொழிகளை வெறும் இலக்குகளாக மட்டுமே வைத்திருக்காமல், நிலையான நிதி ஆதரவு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் நடைமுறை செயல்பாடுகளாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம் மக்களின் அன்றாட வாழ்க்கை, பாரம்பரியம், வாழ்வாதாரத்துடன் இணைந்துள்ளது என்று குறிப்பிட்ட அமைச்சர், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் வளர்ச்சிப் பணிகளும் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும் என்றார். மேலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை கோட்பாட்டின் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சியின் போது பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள், கார்டஜீனா நெறிமுறை தொடர்பான இந்தியாவின் 5-வது தேசிய அறிக்கை, உயிரி பன்முகத்தன்மை மாநாட்டு கையேடு, மரபணு வளங்களின் சமத்துவப் பகிர்வில் இந்தியாவின் வெற்றிக் கதை ஆகிய நான்கு முக்கிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இவை இந்தியாவின் வெளிப்படையான சுற்றுச்சூழல் நிர்வாகத்தையும், சர்வதேச அளவிலான தலைமைப் பண்பையும் பறைசாற்றுகின்றன.

எந்தவொரு நாடும் தனித்து நின்று உலகளாவிய பல்லுயிர் பெருக்க இலக்குகளை எட்ட முடியாது என்று தெரிவித்த திரு பூபேந்தர் யாதவ், குன்மிங்-மான்ட்ரீயல் சர்வதேச கட்டமைப்பின் இலக்குகளை முழுமையாகச் செயல்படுத்த அனைத்து சர்வதேச அமைப்புகளுடனும் இந்தியா தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329499&reg=3&lang=1

***

SS/PD/RJ 


(வெளியீட்டு அடையாள எண்: 2329711) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी