எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதைபடிவமற்ற மின் உற்பத்தித் திறனுக்கான இலக்கை எட்டும் வகையில் இந்தியா முனைப்புடன் செயல்பட்டு வருகிறது: மத்திய அமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக்

இடுகை இடப்பட்ட நாள்: 28 OCT 2026 2:42PM by PIB Chennai

புதைபடிவமற்ற மின் உற்பத்தித் திறனுக்கான இலக்கை எட்டும் வகையில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக மத்திய மின்துறை இணையமைச்சர் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்தார்.

சிங்கப்பூரில், மெரினா பே சான்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மையத்தில், 2026 அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெற்ற சிங்கப்பூர் சர்வதேச எரிசக்தி வாரம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

2026 செப்டம்பர் 30 நிலவரப்படி, இந்தியாவின் நிறுவப்பட்ட மொத்த மின் உற்பத்தித் திறன் 558.9 ஜிகாவாட் ஆக உள்ளது என்றும், இதில், 308 ஜிகாவாட் (அதாவது 55 சதவீதம்) புதைபடிவமற்ற எரிசக்தி ஆதாரங்களிலிருந்து கிடைப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2030-ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற மின் உற்பத்தித் திறனை அடைவதற்கான இலக்கை நோக்கி இந்தியா செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இலக்கில் 50 சதவீத புதைபடிவமற்ற மின் உற்பத்தித் திறனை, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக எட்டப்பட்டு விட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் முக்கியத் திட்டங்களின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்த அவர், பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின்சக்தித் திட்டத்தின் கீழ், 53 லட்சம் இல்லங்களின் மேற்கூரைகளில் சூரியசக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதன்மூலம், 63 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகவும் திரு ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2329438&reg=3&lang=1   

***

SS/SV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2329702) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी